மதுரையில் இருந்து திருப்பதிக்கு சென்ற சுற்றுலா பேருந்து விபத்து : கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதிய கோரம்… 15 பேர் படுகாயம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2022, 7:13 pm

திருப்பதி : மதுரையில் இருந்து பக்தர்களை சுற்றுலாவாக திருப்பதிக்கு அழைத்து வந்த தனியார் பேருந்து, கண்டெயினர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மதுரையை சேர்ந்த 15 பேர் காயமடைந்தனர்.

மதுரையில் இருந்து பக்தர்களை திருப்பதி மலைக்கு சுற்றுலாவாக ஏற்றி அழைத்து வந்த தனியார் பேருந்து, திருப்பதி-சித்தூர் இடையே உள்ள பனம்பாக்க கிராமம் அருகே கண்டெய்னர் லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் பேருந்தின் முன் பகுதி கடுமையாக சேதம் அடைந்தது. இதில் பேருந்து ஓட்டுனர் உட்பட முன்னிருக்கையில் உட்கார்ந்திருந்த 15 பேர் காயமடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சந்திரகிரி போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

  • thug life audio launch date postponed because of war தக் லைஃப்-ஆ முக்கியம்?- ஆபரேஷன் சிந்தூரால் அதிரடி நடவடிக்கை எடுத்த கமல்! ஆஹா…