வைத்திலிங்கத்திற்கு கொரோனா… அடுத்தடுத்து டிவிஸ்ட் : ஓபிஎஸ்க்கு நெருக்கடி.. அடுத்த மூவ் என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2022, 11:16 am

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.

இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.

அடுத்த மாதம் 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளனர். இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் நெருங்கிய ஆதரவாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஓபிஎஸ்க்கு ஒரு கை இழந்தது போல அமைந்துள்ளது.

  • crowd for vijay ஒரு பிரியாணி கேட்டது குத்தமா?- விஜய்யை நோக்கி படையெடுத்து வந்த கூட்டம்! தரமான சம்பவம்…