தமன்னாவிடம் அப்படி ஒன்னு இல்லவே இல்ல.. வில்லங்கமாக பேசிய வில்லன் நடிகர்.. சைடு கேப்பில் கலாய்த்த பாடகி சின்மயி.!

Author: Rajesh
1 July 2022, 11:37 am

தி நைட்டிங்கேல் புரொடக்ஷன் தயாரிப்பில் சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் லீட் ரோலில் நடித்திருக்கும் நாயகி காவ்யா, நடிகர் ராதாவி மற்றும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் ராதாரவி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தற்காக நன்றி தெரிவித்தார். நல்ல கதை மற்றும் கேரக்டர் என தெரிந்ததால் நடித்ததாக கூறிய அவர், கனல் படம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசும்போது, ” நான் கன்னட படத்தில் தான் நடித்துக் கொண்டிருந்தேன். கமல் தான் என்னை முதன்முதலாக தமிழுக்கு அழைத்து வந்து மன்மதலீலை படத்தில் நடிக்க வச்சார். கமலுக்கு எவ்ளோ திறமை பாருங்க. இப்போது கூட நம்பர் ஒன் கலெக்ஷன் எடுத்தாரு பாருங்க அதுதான் திறமை. நானும் நானூறு படங்களில் நடிச்சிருக்கேன்.ஆனால் நானும் நடிப்பேனும் இன்னும் எல்லார்கிட்டயும் சொல்ல வேண்டியிருக்கு.

பெண்கள் என்னை திட்டினால் தான் எனக்கு சம்பளம். ஏனென்றால், குடும்பத்தை கெடுக்கிறேன். சிலரோட வாழ்க்கையை கெடுக்கிறேன். ஆனால் என்னை நடிகனாக அவர்கள் பார்க்கிறார்கள். நல்ல நடிக்கிறேன் என்று கூட சொல்கிறார்கள். அதுபோதும் எனக்கு. ஏர்போர்ட்டில் தமன்னாவை சுற்றி சுற்றிப் பார்த்தேன். ஒரு இடத்தில் கூட கருப்பு இல்லை. அதேமாதிரி இப்படத்தில் நடித்திருக்கும் காவ்யாவும் இருக்கிறார். என கூறினார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் ஒரு நடிகை உடலை பற்றி எப்படி பேசலாம் என்று ராதாரவிக்கு எதிராக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இது தான் சான்ஸ் என பாடகி சின்மயி இந்த பெரிய மனுஷன் தான் டப்பிங் யூனியனில் இருந்து என்னை நீக்கினார் என ட்வீட் போட்டு தன் பங்குக்கு வெளுத்து வாங்கி இருக்கிறார். மீடூ விவகாரத்தில் வைரமுத்து மீது புகார் அளித்த சின்மயியை டப்பிங் யூனியனில் இருந்தே வெளியேற்றி இருந்தார் ராதாரவி என்பது குறிப்பிடத்தக்கது.

  • chinmayi gives strong reply for controversy on ranbir kapoor eating beef மாட்டுக்கறி சாப்புட்டு இராமரா நடிக்கலாமா? சர்ச்சைக்குள் சிக்கிய ரன்பீர் கபூர்! சின்மயியின் தரமான பதிலடி!