Shoot -ல அவர பாத்தா தொட நடுங்கும்.. பிரபல நடிகர் பற்றி ஓப்பனாக சொன்ன நடிகை ரம்பா..!

Author: Rajesh
5 July 2022, 2:27 pm

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிகர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். அரசியலிலும் இருந்துள்ளார் இருக்கிறார். ஒரு நடிகராக மட்டுமில்லாமல், நிஜ வாழ்க்கையிலும் அவரை பலர் ரியல் ஹீரோ என்று கூறுவது உண்டு.

இந்த நிலையில், விஜய்காந்துடன் பணியாற்றிய பல நடிகர்கள், நடிகைகள் அவரை பற்றி புகழ்ந்து பேசுவது உண்டு அந்த வகையில், தர்ம சக்கரம் படத்தில் நடித்த ரம்பா ஒரு பேட்டியில் விஜய்காந்துடன் பணியாற்றியது குறித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் ” விஜயகாந்த் சார் மனதில் தோன்றுவதை வெளிப்படையாக பேசி விடுவார். அவரிடம் எனக்கு அந்த குணம் மிகவும் பிடிக்கும். தர்மசக்கரம் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் வைத்து எடுக்கப்பட்டபோது நிறைய கூட்டம் வரும். இதனால் பாடல் காட்சிகள் எடுக்க சீக்கிரமாக அந்த இடத்திற்கு போகணும்.

விஜயகாந்த் சார் என்னிடம் ரம்பா காலையில் எத்தனை மணிக்கு படப்பிடிப்புக்கு வருகிறாய்..? என்று கேட்டார் எனக்கு கால்ஷீட் 7 மணிக்கு இருக்கும் ஆனால், விஜயகாந்த் என்னிடம் நான் காலையில் 4.30 மணிக்கு இருப்பேன் நீ வரியா ரம்பா என்று கேட்டார். நான் 7 மணிக்கு போவேன், ஆனால் சார் 4.30கே அங்கு உக்காந்து இருப்பார். அந்த விஷியத்துல அவர் ரெம்ப ஸ்ட்ரிக்ட், சார் கூட வேலை செய்தது எனக்கு ரொம்ப பயம். அவர் ரெம்ப ஸ்ட்ரிக்ட் கூர்மையாக இருப்பார்” என தெரிவித்துள்ளார்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?