தொடரும் தாக்குதல்.. உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் : இடிபாடுகளில் சிக்கி 10 பேர் பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2022, 5:25 pm

உக்ரைன் மீது ரஷியா தனது படைகளை அனுப்பி கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. அன்று முதல் தற்போது வரை அங்கு இடைவிடாமல் போர் நடைபெற்று வருகிறது.

இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், ரஷியாவின் தாக்குதல்களுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

இதனிடையே உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள பெரும்பாலான நகரங்களை ரஷிய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. தற்போது கிழக்கு உக்ரைனில் கடுமையான போர் நடந்து வருகிறது.

கடந்த வாரம் லிசிசான்ஸ்க் நகரத்தை ரஷிய படை கைப்பற்றியது. மேலும் ரஷிய ராணுவம் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள சாசிவ்யார் என்ற நகரத்தில் ரஷிய படைகள் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று பலத்த சேதமடைந்தது.

இந்த தாக்குதலால் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் உக்ரைன் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

  • chinmayi gives strong reply for controversy on ranbir kapoor eating beef மாட்டுக்கறி சாப்புட்டு இராமரா நடிக்கலாமா? சர்ச்சைக்குள் சிக்கிய ரன்பீர் கபூர்! சின்மயியின் தரமான பதிலடி!