கம்மல், காப்பு, செயின் அணிய பள்ளி மாணவர்களுக்கு தடை… இன்னும் பல உத்தரவுகளை பிறப்பித்த சமூக பாதுகாப்புத்துறை

Author: Babu Lakshmanan
14 July 2022, 6:18 pm

காப்பு, கம்மல், செயின் உள்ளிட்டவை அணிந்து பள்ளிகளுக்கு வருவதற்கு மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் சாதிய வன்மம் கடந்த சில நாட்களாக தென்பட்டு வருகிறது. அண்மையில் பள்ளி ஒன்றில் கையில் கயிறு கட்டி வந்தது தொடர்பாக மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட தமிழக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பள்ளிக்கூட மாணவர்கள் காப்பு, கம்மல், செயின், கயிறு கட்ட தடைவிதித்து சமூகப் பாதுகாப்புத் துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.

இது தொடர்பாக இது தொடர்பாக வேலூர் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் விவரம் பின்வருமாறு:- மாணவ மாணவியர் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வர வேண்டும், மாணவ மாணவியர் தினமும் பள்ளி சீருடையை சுத்தமாக அணிய வேண்டாம், தலையில் எண்ணெய் வைத்து தலைவார வேண்டும், கை கால் நகங்களை சுத்தமாக வெட்ட வேண்டும் மற்றும் தலைமுடியை சரியான முறையில் வெட்டப்பட வேண்டும். ஒவ்வொருவரும் காலணி அணிந்திருக்க வேண்டும், மாணவர்கள் டக்கின் செய்யும்போது சீருடை வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.

பெற்றோர் கையெழுத்துடன் வகுப்பு ஆசிரியரிடம் அனுமதி பெற்று தான் விடுப்பு எடுக்க வேண்டும், பள்ளிக்குச் செல்லும் போது அடையாள அட்டை அணிய வேண்டும், பிறந்தநாள் என்றாலும் மாணவ மாணவியர்கள் பள்ளி சீருடைகளில்தான் பள்ளிக்கு வரவேண்டும், மாணவ மாணவியர்களுக்கு பள்ளிக்கு இருசக்கர வாகனம், மொபைல் போன் போன்றவற்றை பள்ளிக்கு கொண்டு வர அனுமதி இல்லை, வகுப்பறையில் பாடங்கள் கவனமாக கவனிக்க வேண்டும், ஆசிரியர் பேச்சை மாணவர்கள் கேட்கவேண்டும், மாணவ மாணவியர்கள் சீருடையில் பள்ளிக்கு வரும்போது கூடுதலாக கலர் டிரஸ் எடுத்து வரக்கூடாது

வகுப்பில் மாணவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், அடிக்கடி கை கால்கள் கழுவவேண்டும், மாணவர்கள் எங்கு சென்றாலும் வரிசையாக செல்ல வேண்டும், மாணவ-மாணவிகள் போதை பொருட்களை பயன்படுத்தக் கூடாது மற்றும் எந்த ஒரு டாட்டூ போட்டுக்கொண்டு பள்ளிக்கு வர அனுமதி இல்லை, மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு செல்லும் போது அவர்களுடன் சீருடை சட்டையில் உள்ள பொத்தான்களை கழற்றக் கூடாது, வகுப்பறையில் நோட்டு புத்தகங்களை கிழித்தெறிய கூடாது, மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது காப்பு, கம்மல், செயின், கயிறு போன்ற ஆபரணங்கள் ஏதும் அணியக்கூடாது. மாணவ மாணவியர்கள் PET வகுப்பின் போது பள்ளி வளாகத்திற்குள்ளேயே விளையாடவேண்டும், வெளியே செல்லக்கூடாது. ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மாணவ மாணவியர்கள் வகுப்பறையை விட்டு வெளியில் செல்லக்கூடாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!