யார்ரா இவ எட்டி பாத்தே ஆள கவுத்துருவா போல ….மடோனா செபாஸ்டியன் கியூட் வீடியோ !!

Author: kavin kumar
16 August 2022, 6:34 pm

மடோனா செபாஸ்டியன் மலையாள திரைப்பட பின்னணிப் பாடகி மற்றும் திரைப்பட நடிகை . கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கி 2015 ஆண்டு வெளியான “பிரேமம்” திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைத்துறையில் நடிகையாக மடோனா அறிமுகமானார்.

பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்த மடோனா தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். மலையாளத்தில் மட்டும்மில்லாது தமிழ்நாட்டிலும் பிரேமம் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டது “பிரேமம் ” படம் .

மடோனா தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, ‘ஜூங்கா’ , படங்களில் நடித்தார். தனுஷுக்கு முதல் முறையாக இயக்கி நடித்த ‘ப.பாண்டி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அது மட்டுமில்லாமல் பெரும்பாலும் மலையாள படங்களில் நடிக்கும் மடோனா .கடைசியாக தமிழில் “வானம் கொட்டட்டும்” படத்தில் நடித்தார்.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள மடோனாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. முன்பு போல் பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் கவர்ச்சியில் இறங்கிவிட்டார் . அவ்வப்போது தனது சோசியல் மீடியாக்களில் போட்டோக்கள் ,வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . அந்தவகையில் தற்போது போட்டோஷூட் ஒண்டிற்காக சேலை காட்டி கியூட் போஸ் கொடுத்து ரசிங்கர்களை கவர்ந்துள்ளார்.

  • prakash raj criticize vijay and acting in jana nayagan movie விஜய் முகத்துல இனி எப்படி முழிக்க முடியும்? ஜனநாயகன் படப்பிடிப்பில் பிரகாஷ் ராஜிற்கு வந்த சங்கடம்!