பள்ளி வேன் – கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து : வெளியானது அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
26 August 2022, 5:23 pm

திருச்சி : திருச்சியில் பள்ளி வேன் மீது நேருக்கே பேர் மோதல் -10 காயம் – சிசிடிவி காட்சி வெளியீடு

திருச்சி மாவட்டம், சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கூத்தூரில் செயல்படும் தனியார்
கல்லூரி பாலிடெக்னிக் பேருந்து இன்று காலை 50 மாணவர்களுடன் ஸ்ரீரங்கத்தில் இருந்து கூத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை கண்ணன் என்பவர் ஓட்டி வந்தார்.

பேருந்து ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பாலத்தில் இறங்கும்போது அதன்வேகம்
அதிகமாக இருந்துள்ளது. வயது முதிர்வு காரணமாக டிரைவர் கண்ணனால் பேருந்து ஓட்டத்தை கட்டுப்படுத்த இயலவில்லை.

கட்டுப்பாட்டை இழந்த அவரின் பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதுடன் நிற்காமல் எதிரே வந்த மற்றொரு தனியார் பள்ளி வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 மாணவி, ஒரு மாணவன் மற்றும் பொதுமக்கள் என 10க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் பிரதான சாலையில் சுமார் அரை மணி நேரம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து நடைபெற்ற சிசிடிவி காட்சியினை காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?