500 ஆண்டுகள் பழமையான ஈச்சனாரி விநாயகர் கோவிலில் கொழுக்கட்டைகள் படைத்து சிறப்பு வழிபாடு : கட்டுபாடின்றி தரிசனம் செய்த பக்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 August 2022, 10:41 am

கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு.

கோவை பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. கோவை பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.

அதிகாலை 4 மணியிலிருந்து சிறப்பு வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோவையின் சிறப்பு வாய்ந்த ஈச்சனாரி விநாயகர் கோவிலில் வழிபட பொள்ளாச்சி ,மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, மற்றும் அண்டை மாநிலமான கேரளா போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டு வருகின்றனர்.கொரோனா காலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் கூட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் கட்டுப்பாடுகள் இன்றி மன நிறைவுடன் வழிபட்டு வருகின்றனர்.

மேலும் இன்று ஈச்சனாரி விநாயகருக்கு அருகம்புல் மாலை, எருக்கம்மாலை கொழுக்கட்டைகள் வைத்து வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?