சாலையில் சென்ற தனியார் பள்ளிப்பேருந்தில் திடீர் தீவிபத்து : ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய மாணவிகள்!

Author: Babu Lakshmanan
10 September 2022, 9:04 am

வேலூர் : அரக்கோணம் அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த தனியார் பள்ளிப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவ, மாணவிகளை அவர்கள் வீட்டிலிருந்தே அழைத்து வர பேருந்து வசதி இந்த பள்ளியில் உள்ளது. இந்நிலையில், இன்று காலை சேந்தமங்கலம் பகுதியில் இருந்து சுமார் ஐந்து மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, சேந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது, பள்ளி பேருந்தில் இருந்து புகை வருவதை கண்ட, சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள், பேருந்து ஓட்டுநர் இடம் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பேருந்தில் இருந்த ஐந்து மாணவ, மாணவிகளை கீழே இறங்கச் செய்து விட்டார். இதன் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதையடுத்து, வாகனம் தீப்பிடித்து எரியத் துவங்கியது. பின்னர், இச்சம்பவம் குறித்து அரக்கோணம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், எரிந்து கொண்டிருந்த பேருந்தை அணைத்தனர். ஓட்டுநரின் துரித முயற்சி காரணமாக மாணவர்கள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.

  • devi sri prasad complains that turkish singer copied his pushpa movie song என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!