முதலமைச்சரின் கவனம் பள்ளப்பட்டி நகர திமுக மீது விழுமா..? தலைதூக்கும் பிளக்ஸ் கலாச்சாரம்.. மக்களை காவு வாங்குவதற்குள் அப்புறப்படுத்தப்படுமா..?

Author: Babu Lakshmanan
20 September 2022, 9:38 pm

கரூரில் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் திமுகவினர் வைத்த பேனர்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி நகராட்சி. தற்போது தான் இந்த ஆட்சியில் பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக மாறியுள்ளது. இந்நிலையில், பள்ளப்பட்டி நகர திமுக சார்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திமுகவில் பொறுப்பு பெற்றவர்கள் வைத்த பிளக்ஸ் போர்டு இன்று வரை எடுக்கவில்லை.

குறிப்பாக பள்ளப்பட்டி கடைவீதி, பேருந்து நிலையம், ராஜாபேட்டை தெரு, திண்டுக்கல் மெயின்ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செல்லும் இடமெல்லாம் திமுக போர்டுகள் தான்.

இதனால் வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பிளக்ஸ் போர்டுகள் மீதும், அதை வைத்த திமுக பிரமுகர்களின் மீது தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பார்வை படுமா ?? என்கின்றனர் சமூக நல ஆர்வலர்களும், நடுநிலையாளர்களும்.

குறிப்பாக, மக்கள் அதிகம் செல்லும் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களால், ஏதேனும் விபத்து ஏற்படுவதற்கு முன்பாக, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?