2வது திருமணம் செய்ததாக மனைவி போலீஸில் புகார் ; விசாரணைக்கு காவல்நிலையம் வந்த கணவன் விரக்தியில் செய்த காரியம்..!!

Author: Babu Lakshmanan
23 September 2022, 11:42 am

கரூர் ; அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மனைவி கொடுத்த புகாருக்கு விசாரணைக்கு வந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் சித்தார்த்தன் மகன் தர்மேந்திரன் (39). விவசாய கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி சத்யா (37), புலியூரில் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்து வருகிறார். இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.

இந்நிலையில் கணவர், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சத்யா கணவரை விட்டு தனது பிள்ளைகளுடன் 8 வருடமாக தனியாக வசித்து வருகிறார். இதனிடையே, சத்யா குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 18ந்தேதி அன்று கணவர் 2வது திருமணம் செய்து விட்டதாக புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் நேற்று இரண்டு குடும்பாத்தார்களுடன் சத்யா, தர்மேந்திரன் விசாரணைக்கு வந்துள்ளனர். தொடர்ந்து குழந்தைகள் எதிர்காலம் கருதி, முறையாக குடும்ப நடத்திடவும் அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். வீட்டுக்கு செல்வதாக சென்ற தர்மேந்திரன் வெகுநேரம் கழித்து குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையம் அருகே விஷம்குடித்து விட்டதாக உறவினர்களிடம் கூறியுள்ளார்.

உறவினர்கள் தர்மேந்திரனை அழைத்து, குளித்தலை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக முசிறி தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்தவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடலை வைத்துவிட்டு, தர்மேந்திரன் தந்தை சித்தார்த்தன் அளித்த புகாரின்படி குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?