பிக்பாஸ் தமிழ் சீசன் 6: அட அவரும் இருக்காரா? ஆண், பெண் போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ..!

Author: Vignesh
8 October 2022, 10:00 am

சின்னதிரையில் பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியில் முக்கியமான நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. ‘பிக்பாஸில் ஏன் கலந்து கொள்ள நினைக்கிறோம்’ என்பதை விளக்கி வீடியோ எடுத்து விஜய் டிவிக்கு அனுப்பி வைத்ததில், பரிசீலித்து அவர்களில் சிலர் தேர்வாகி இருப்பதாக நம்பக தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

எந்த சீசனிலும் இதுவரை இப்படி ஒரு வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட வில்லை. என்பதால் இந்த பிக்பாஸ் சீசன் 6 -ல் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களாக யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய பிக்பாஸ் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு கோரன்டைன் தொடங்கியது. பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் போட்டியாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பிக்பாஸ் சீசன் 6 இன்னும் இரண்டு நாள்களில் (அக்டோபர் 9 ஆம் தேதி) பிரமாண்டமாகத் துவங்கவிருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் குறித்து பல்வேறு தகவல் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கும் ஆண் போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியே கசிந்துள்ளது. ரசிகர்களின் பேராதரவை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி நாளை ஆரம்பமாக உள்ளது.

இப்போட்டியில் பொறாமை, சண்டை, அழுகை என பலவற்றையும் சமாளித்து, உள்ளே இருக்க கூடிய சகப்போட்டியாளர்கள் மட்டும் இல்லாமல் வெளியில் இருக்கக்கூடிய பொதுமக்களுக்கும் பிடிக்கனும், அப்போது தான் டைட்டிலை பெற முடியும்.

அதே போல் ஆண் போட்டியாளர்கள் லிஸ்டில், விஜய் டிவியில் காமெடியில் கலக்கிய அமுதவாணன், நடிகர் அஸிம், சோஷியல் மீடியா பிரபலம் ஜிபி முத்து, ராபர்ட் மாஸ்டர், சூப்பர் சிங்கர் பிரபலம் சாம் விஷால், சுயாதீன இசைக்கலைஞரான அசல் கொலார், பத்திரிக்கையாளர் விக்ரமன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.

அதே போல் பெண் போட்டியாளர்கள் லிஸ்டில், ஷிவின் கணேசன் என்கிற திருநங்கை, மைனா நந்தினி, மாடல் அழகி ஆயிஷா, மெட்டி ஒலி சாந்தி, சின்னத்திரை நடிகை ரக்ஷிதா, மாடல் அழகி ஷெரீனா, இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய லிஸ்ட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Retro Pooja's black paint makeup looks bad.. Vijay film actress teases ரெட்ரோ பூஜாவுக்கு கருப்பு பெயிண்ட் மேக்கப் மோசம்.. பங்கமாய் கலாய்த்த விஜய் பட நடிகை!