CM ஸ்டாலின் பற்றி பேச உங்களுக்கு தகுதி, அருகதை இல்ல : மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு கனிமொழி எம்பி பதிலடி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2022, 4:28 pm

திமுக துணை பொதுச்செயலாளராக கனிமொழி பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவருக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் மீன் வளம் மற்றும் மீனவர் நலம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர், சமூக நலத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் தலைமையில் 3ம் மைல் பகுதியில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்து, திமுக நிர்வாகிகள் தொண்டர்கள், மகளிர் அமைப்பினர் சால்வை மற்றும் பூங்கோத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக இயக்கம், திமுக தலைவர் நம்பிக்கை வைத்து பொறுப்பு அளித்திருக்கிறார். அவர் நம்பிக்கைக்கு பாத்திரமாக, எதிர்பார்புகளை ஈடு செய்யும் அளவிற்கு பணி செய்வேன்.

இந்தியா என்பது பல்வேறு மாநிலம், வாழ்க்கை, மொழி முறை கொண்டது. அனைவரும் ஹிந்தி பேச வேண்டும் என திணிக்க கூடாது. தமிழக முதல்வர் ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக செயல்படுகிறார் என்று எல்.முருகன் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு?

தமிழக முதல்வர் எப்படி செயல்படுகிறார் என்று சொல்லக்கூடிய தகுதியும் அருகதையும் இருக்கக்கூடியவர்கள் இதை சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழ்நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசியல் அதிகாரத்தில் அதுவும் அரசாங்கம் எப்படி நடத்த வேண்டும் என்பதை பார்க்கக் கூடிய ஆர்வம் இருக்கக்கூடியவர் அத்தனை பேரும் தமிழகம் முதல்வரை முன்வைக்கக்கூடிய திராவிட மாடல் ஆட்சியை உதாரணமாக எடுத்து பேச கூடிய அளவிற்கு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்தியாவே திரும்பி பார்க்கக் கூடிய அளவிற்கு ஆட்சி நடத்தி வருகிறார். அவர்களுக்கு தமிழக ஆட்சி மீது பயமாக இருக்கலாம் ஆகவே திரும்ப திரும்ப சொல்லி கொண்டு இருக்கலாம் என கூறினார்.

இந்தி பிரச்சனையை மறுபடியும், மறுபடியும் கொண்டு வருவது மத்திய அரசு தான், மத்திய அரசு செயல்படாமல் இருப்பதை திசை திருப்பதற்காக தான் என்று நமக்கு தோன்றுகிறது. தேவையே இல்லாமல் மொழி பிரச்சினையை மறுபடியும் மறுபடியும் கொண்டு வருகிறார்கள். முதலில், கமிஷன் ரிப்போர்ட் மத்திய அரசு தான் வெளியிடுகிறார்கள். இவர்கள் செய்யாமல் இருந்திருந்தால் முதல்வர் எதிர் வினை தர வேண்டிய அவசியம் இருந்திருக்காது என கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!