தமிழகத்தில் வெள்ள நீரை சேமிக்கும் திட்டம் விரைவில் சாத்தியமாகும் : முக்கொம்பு அணையை ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன் நம்பிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2022, 4:29 pm

வளர்ந்து வரும் விஞ்ஞானத்தில் வெள்ள நீரை வீணாகாமல் சேமிப்பது சாத்தியமான ஒன்றே என திருச்சி முக்கொம்பு மேலணையில் ஆய்வு செய்த பின்னர் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முக்கொம்பு மேலணையினையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தாமிரபரணி, காவிரி ஆறுகளில் பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் கலக்கிறது. வளர்ந்து வரும் விஞ்ஞானத்தில் வெள்ள நீர் சேமிப்பு சாத்தியமாகும். வீணாகும் நீரை சேமித்து வைக்கும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளும்.

மேட்டூர் சரபங்கா இணைப்பு பணிகள் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு துளி நீரை கூட சேமிக்கப்படவில்லை. ஏரிகளை வைத்து சீரமைத்து இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா அரசு வெள்ள நீரை சேமித்து வைக்கிறது அது போல திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுமா என்கிற கேள்விக்கு ?இறந்தவர்களுக்கும் உயிரூட்டும் வகையில் விஞ்ஞானம் வளர்ச்சி பெற்று உள்ளது எனவே வெள்ளநீரை சேமிக்கும் திட்டம் கண்டிப்பாக சாத்தியமானது தான். தமிழகத்தில் அனைத்து ஏரி குளங்களும் தனது முழுக்க கொள்ளளவை எட்டி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் ஒருவரை கூட பணி நிரந்தரம் செய்யவில்லை – ஆனால் வரும் ஐந்து ஆண்டுகளில் நிரந்தர பணியாளர்களை பணியமற்ற திமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

காவிரி கோதாவரி திட்டம் தமிழகத்தில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?