நிச்சயதார்த்தம் முடிந்ததும் சன் டிவி சீரியல் நடிகைக்கு டாட்டா காட்டிய பிரபல சீரியல் நடிகர் : 3 வருடமாக காத்திருந்து வெறுத்துப் போன டாப் நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2022, 6:44 pm

சன்டிவியில் இன்றளவு டிஆர்பியை உயர்த்தும் சீரியலில் ரோஜாவுக்கு பெரும் பங்குண்டு. கொரோனாவுக்கு பின்னரும் ரோஜா சீரியலுக்கு மவுசு ரொம்பவே அதிகம்.

அதுவும் இந்த சீரியலில் கதாநாயகனாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன் என்பவர் நடிக்க, பிரியங்கா என்பவர் ரோஜா எனும் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர்கள் இருவரும் நடிக்கும் ரொமான்ஸ் காட்சிகளுக்கு அப்லாஸ் அள்ளி வருகிறது.

பிரியங்கா நல்கரி கடந்த 2019ஆம் ஆண்டு தனது இன்ஸ்டாகிராமில் எல்லாத்துக்கும் சாரி… எப்படா வருவ உனக்காக காத்துக் கொண்டே இருக்கிறேன் என ஒரு மெசேஸ் பதிவிட்டிருந்தார்.

இகு குறித்து பிரியங்காவிடம் ரசிகர்கள் கேட்டதற்கு இவர் தெலுங்கில் சீரியலில் நடித்து வரும் ராகுல் என்பவரை காதலித்து 2018ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்களாம்.

இந்நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்து ராகுல் ஹைதராபாத்தில் இருந்து மலேசியாவிற்கு சென்றாராம். மலேசியா சென்ற பிறகு பிரியங்காவிடம் ராகுல் பேசவே இல்லையாம் எந்த தொடர்பும் இல்லாத காரணத்தினால் பிரியங்கா ஒரு நாள் பேச முயன்றுள்ளார்.

எதற்கும் பயனில்லாமல் போய் விட்டதாம். இந்நிலையில் பிரியங்கா இனிமேல் எனக்கும் ராகுலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது அவரவர் வாழ்க்கை அவரவர் பார்த்துக் கொண்டால் போதும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரியங்கா மற்றும் ராகுல் நிச்சயதார்த்தத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?