புகழ் பெற்ற தமிழக காவல்துறையில் அரசியல் புகுத்தி சிறுமைப்படுத்துவது யார்? அண்ணாமலை கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2022, 9:18 pm

கோவை கார் வெடிப்பு குறித்து, 18-ந்தேதி அன்றே, அதாவது தற்கொலைப்படை தாக்குதல் நடந்ததற்கு 5 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை மத்திய உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்த நிலையில் கோவையில் கார் வெடிப்பு நிகழப்போவதாக மத்திய உள்துறை முன்பே எச்சரித்ததாக அண்ணாமலை கூறியது அபத்தமானது. அண்ணாமலை குறிப்பிடுவது உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்ட பொதுவான சுற்றறிக்கையாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவை கார் வெடிப்பு வழக்கில் சட்ட நடைமுறை காலதாமதமின்றி பின்பற்றப்பட்டு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது என்றும் மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்பே என்ஐஏ விசாரணைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார் என்றும் கூறிய போலீசார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போலீசார் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்தனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் காரில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் என்ன என்பதை ஆய்வு செய்யும் முன்பே அது என்ன என்று பல கருத்துக்களை கூறி புலன் விசாரணையை திசை திருப்ப அண்ணாமலை முயற்சிக்கிறார் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் காவல்துறையின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகள் மீது எங்களுக்கு பெருமதிப்பும் மரியாதையும் உள்ளது.

ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள்.

காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவரை நாங்கள் முன் வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே ஆனால் அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.

காவல்துறையின் மாண்பை குறைத்து விட்டதாக என் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் எவ்வாறு நடந்தது என்பதனை அவர்கள் ஆராய வேண்டும்.

பல பெருமைகளுக்கு பெயர் போன தமிழக காவல் துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப்படுத்துவது யார் என்று மக்கள் அறிவர்.

  • surya sethupathi shared his weight loss experience for phoenix movie ஒரே வருடத்தில் 60 கிலோ Weight Loss? சூர்யா சேதுபதியின் மிரளவைக்கும் உடற்பயிற்சி அனுபவங்கள்!