அரியவகை கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ பட இயக்குனர் அதிர்ச்சி தகவல்..!

Author: Vignesh
4 November 2022, 5:45 pm

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், உருவான காமெடி திரைப்படம் ‘பிரின்ஸ்’. காமெடியை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையும், மற்றொரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

prince_updatenews360

புதுச்சேரியில் அமைந்துள்ள, மேல்நிலைப் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் சிவகார்த்திகேயன், அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருக்கும் பிரிட்டிஷ் பெண்ணான மரியா ர்யபோஷாப்கா மீது காதல் கொண்டு… அவரை திருமணம் செய்ய முயற்சிப்பதை மிகவும் காமெடியாக இயக்கி இருந்தார் இயக்குனர்.

Director-Anudeep-updatenews360

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் தனக்கு இருக்கும், அரியவகை நோய் குறித்து முதல் முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது இவருக்கு Highly Sensitive Person என்ற நோய் பாதிப்பு உள்ளதாம்.

இந்த அரியவகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காபி குடித்தால்… இரு தினங்களுக்கு தூங்க முடியாதாம். ஆப்பிள் ஜூஸ் குடித்தால் மூளையே சுத்தமாக செயல்படாமல் போய்விடுமாம். அதிக ஒளி, அதிக நெடி, போன்றவற்றை இவர்களால் ஏற்றுக்கொள்ளவோ, அந்த சூழலில் சுவாசிக்கவோ முடியாது என தெரிவித்துள்ளார்.

samantha -updatenews360

சமீபத்தில் தான் நடிகை சமந்தா தனக்கு ஏற்பட்டுள்ள மையோசிட்டி பிரச்சனை குறித்து தெரிவித்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், அவரை தொடர்ந்து அனுதீப் தனக்குள்ள பிரச்சனை குறித்து பேசி ஷாக் கொடுத்துள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?