6 கிலோ தங்க நகையுடன் மாயமான ஊழியர்… பரிதவிப்பில் நகைக் கடை உரிமையாளர் : தீவிர விசாரணையில் போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2022, 6:08 pm

கோவையில் தங்க நகை கடையில் பணிபுரிந்து வந்த ஊழியர் 6 ஆயிரத்து 273 கிராம் தங்க நகையுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராஜா வீதியில் வசந்த் ஜுவல்லரி என்ற பெயரில் ரோகின் வசந்த் என்பவர் கடை நடத்தி வருகிறார். ஆர்டரின் பெயரில் தங்க நகைகள் செய்து வெளி மாநிலங்களில் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடையில் பணிபுரிந்து வந்த நடராஜனிடம் 6 கிலோ 273 கிராம் தங்க நகைளை டெலிவிரி செய்ய ஹைதராபாத் அனுப்பி வைத்துள்ளனர்.

இரண்டு நாட்கள் ஆகியும் நகை கடைக்கு நகை செல்லவில்லை எனவும் நடராஜன் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆனது தெரிந்தவுடன் நகை திருடப்பட்டது என்ற தகவல் தெரிய வந்ததை அடுத்து
பெரியகடைவீதி காவல் நிலையத்தில் ரோகின் வசந்த் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் தங்க நகை நகைகளுடன் மாயமான ஊழியர் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • People from Tamil Nadu should not be allowed in Tirupati: Sudden demand! திருப்பதியில் தமிழக பிரதிநிதிகளுக்கு தரிசனம் வழங்கக்கூடாது : சந்தானம் படத்தால் வந்த வினை!