10 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்த தீங்கிரை பட பாடல்..!

Author: Vignesh
5 December 2022, 9:00 pm

சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் TWD மீடியா சார்பில் ப்ரியா Y தர்ஷினி தயாரிக்க, A.கிருஷ்ணகுமார் மற்றும் T.பிரசாத் அவர்களின் இணை தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை.

மக்கள் இடையே ஒரு படத்தை பற்றிய ஆர்வத்தை தூண்டுவது, அப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான தீங்கிரை படத்தின் டிரைலர் மற்றும் பாடல் சினிமா ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Theenkirai - updatenews360

தீங்கிரை படத்தில் ஶ்ரீகாந்த்தும், நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். நாயகியாக அபூர்வா ராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கிறார்கள் . மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார். அறிமுக இயக்குனர் பிரகாஷ் ராகவதாஸ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Theenkirai - updatenews360

சைக்கோ கிரைம் திரில்லர் ஜான்ராவில் உருவாகி இருக்கும் தீங்கிரை படத்தின் டிரைலரை பார்த்தவர்கள், வெகுவாக பாராட்டி வருகிறார்கள். மேலும் சித் ஸ்ரீராம் பாடிய அவிழாத காலை என்னும் ரொமான்டிக் பாடல் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டு பத்து லட்ச பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

Theenkirai - updatenews360

தீங்கிரை படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.பிரகாஷ் நிக்கி பாடலில், ஹரிஷ் அர்ஜுன் பின்னனி இசையமைக்கும் இந்த படத்திற்கு யுவராஜ் மனோகரன் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக என்.கே. ராகுல் அவர்களும், படத்தொகுப்பாளராக C.S பிரேம் குமார் அவர்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள் . இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரகாஷ் ராகவதாஸ் இயக்கியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?