வீடுகளை அடித்து நொறுக்கிய யானைகள்.. நூலிழையில் உயிர் தப்பிய கட்டிடத் தொழிலாளர்கள் : பரபரப்பு காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2022, 9:31 pm
Elephant attack - Updatenews360
Quick Share

கோவை துடியலூர் அருகே கட்டிட தொழிலாளர்களின் தற்காலிக வீடுகளை முற்றுகையிட்ட காட்டு யானைகளின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை, வரப்பாளையம் , பொன்னூத்து உள்ளிட்ட கிராமங்களில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த கிராமங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி நாள்தோறும் காட்டு யானைகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு 4 யானைகள் கொண்ட கூட்டம் கதிர் நாயக்கன்பாளையம் கிராமத்துக்குள் புகுந்துள்ளது. அங்குள்ள வீடு மற்றும் அருகில் உள்ள தோட்டத்தில் புகுந்து அங்கிருந்த விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

இதனை தொடர்ந்து அப்பகுதியில் கட்டிட வேலைக்காக தங்கி உள்ள தொழிலாளர்களின் அறைகள் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற யானைகள் தொழிலாளர்கள் சமையலுக்கு வைத்திருந்த அரிசிகளை வெளியே இழுத்து சாப்பிட்டு விட்டு, தங்கியிருந்த தகர சீட்டுகளையும் சேதபடுத்தியது.

அப்போது அருகில் உள்ள தகர சீட்டில் தங்கியிருந்த தொழிலாளர்கள் யானைகளை பார்த்து அலறி ஓடி உயிர் தப்பினர். மேலும் யானையும் உள்ளே நுழைய முயன்ற இந்த காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இரவு நேரங்களில் தைரியமாக காட்டு யானைகள் உலா வருவதால் வனத்துறையினர் ரோந்து பணிகளை தீவிரபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 339

0

0