பொங்கல் ரேசில் முதலிடத்திற்கு வந்த அஜித்.. அடுத்த இடத்தில்தான் விஜய்யா? ஆரவாரத்தில் AK ரசிகர்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 December 2022, 9:59 pm

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படமும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படமும் இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.

இந்த இரு படங்களிலுமே, அதிக ரசிகர்களைக் கொண்ட கோலிவுட் டாப் ஹீரோக்கள் நடித்துள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தை முதல் முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி உள்ளதாலும், விஜய் முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்துள்ளதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதே போல் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படத்தை, ஏற்கனவே அஜித்தை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் எச்.வினோத் மூன்றாவது முறையாக இயக்கி உள்ளதால், கண்டிப்பாக இந்த திரைப்படம் ஹாட்ரிக் வெற்றி பெறும் என அஜித் ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இரண்டு படங்களும் ஒன்றாகவே மோத உள்ளதாக கூறப்பட்ட நிலையல், துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல வாரிசு திரைப்படம் ஒரு நாள் தள்ளி, அதாவது 12ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஒரே திரையரங்குகளில் பல ஸ்கிரீன்கள் உள்ள நிலையில், அஜித் விஜய் ரசிகர்கள் தற்போதே பேனர், போஸ்டர் ஒட்ட தயாராகி வருகின்றனர்.

  • tvk reference in tourist family movie தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?