இது தெருச்சண்டை மாதிரி இருக்கு.. போஸ்டர் அடித்து தரத்தை குறைத்துக் கொண்ட திமுக.. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
10 January 2023, 2:08 pm

ஆளுநரை விமர்சிக்கும் விதமாக சென்னையில் திமுகவினர் போஸ்டர் அடித்து ஒட்டியதை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- ஆளுநர் ஒரு கருத்தை சொல்றாரு, அதை அவர் கட்டாயப்படுத்தவில்லை. ஆளுநர் சொல்ற கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருந்தால் கருத்துக்களால் எதிர்கொள்ளலாம். அதனை விட்டு விட்டு போஸ்டர் அடித்து ஒட்டுவது போராடக் கூடிய மனநிலைக்கு வருவது எந்த அளவுக்கு கருத்துக்களுக்கு மரியாதை கொடுக்கிற பண்பு இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

Vanathi - Updatenews360

ஜனநாயக ரீதியில் இறங்குகின்ற இந்த நாட்டில் உங்களுடைய தரத்தை குறைத்துக் கொண்டு தெருச்சண்டை போல தகுதியை குறைத்துக் கொள்கிறார்கள், என தெரிவித்தார்.

பொங்கல் நிகழ்ச்சி தொடர்பாக ஆளுநர் அழைப்பிதழ் குறித்த கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “தமிழக ஆளுநர் என மீடியாக்கள் குறிப்பிடுவது இல்லையா..? அல்லது மாநில அரசு தங்களுடைய விளம்பரத்தில் தலை நிமிர்கிறது தமிழகம் என சொல்லவில்லையா..? தமிழகம் என்ன சட்டவிரோத வார்த்தையா..?

இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான வார்த்தையா..? ஏன் இப்படி..? பேசுவதற்கு மக்கள் பிரச்சனை நிறைய இருக்கிறது, பால் விலை, மின்சார கட்டணம் உயர்வு மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை திசை திருப்பும் விதமாக பிரச்சினையாக கிளப்புகிறார்கள், என தெரிவித்தார்.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?