வெவ்வேறு மதம்… 69 சாதி மக்கள்… தேவாலயத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் ; கவனத்தை ஈர்த்த கிராம மக்கள்..!

Author: Babu Lakshmanan
16 January 2023, 1:11 pm

புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச் சாலையில் உள்ள பொண்ணுரெங்க தேவாலயத்தில் மதங்களைக் கடந்து ஜாதிகளை கடந்து அனைத்து 69 ஜாதிகளும் ஒன்றிணைந்து ஐந்தாயத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து பொங்கல் விழாவை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தைச் சேர்ந்த 69 ஜாதிகளை சேர்ந்தவர்கள் பலர், மெய்வழிச் சாலையில் மதத்தை பின்பற்றி புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச் சாலையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அனந்தர்கள் என்றும் பிரம்ம குலத்தினர் என்று அழைப்பார்கள். சீக்கியர்கள் போன்று இவர்களும் தலையில் தலப்பாக்கட்டு வைத்திருப்பார்கள். மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் பரம்பரையை சேர்ந்த சாலை வர்கவன் என்று அழைக்கப்படுவார்கள்.

மெய்வழிச் சாலையை பின்பற்றுபவர்கள் பொங்கல் பண்டிகையை ஒன்றாக இணைந்து கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகையின் போது எந்த மாநிலத்திலும், எந்த மாவட்டத்திலும் இருந்தாலும் அவர்கள் அனைவரும் மெய்விழிச்சாலைக்கு வந்து விடுவார்கள். அங்கு அனைவரும் ஒன்றிணைந்து பொங்கல் பானைகளை வைத்து பொங்கல் பண்டிகையை பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.

மெய்வழிச் சாலை பொறுப்பாளர்கள் சாலை வர்கவான், சிறப்பு பூஜைகளுக்கு பிறகு புனித நீரை அளிப்பார்கள். அதனை பெற்றுக் கொண்டு பொங்கல் பானைகளை புனித நீரை ஊற்றி பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் மதங்களைக் கடந்து ஜாதிகளை கடந்து மூன்று மதத்தைச் சேர்ந்த 69 ஜாதிகளை சேர்ந்தவர்கள் மெய்வழிச் சாலையை பின்பற்றுபவர்கள்.

இங்கு பொங்கல் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். விழாவில் முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜய் பாஸ்கர் பங்கேற்றார்.

  • retro movie first day collection report ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!