மீண்டும் சேர புலம்பும் கணவர்… பிக்பாஸ் பிரபலத்தின் புதிய காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி..!

Author: Vignesh
19 January 2023, 9:00 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

Rachithamahalakshmi_UpdateNews360

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்தது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 100 நாட்களை தாண்டி சென்று இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் இறுதி போட்டியாளர் யார் என்பது தெரியவரும் நிலையில், அனைத்து போட்டியாளர்களையும் பிக்பாஸ் வீட்டில் வரவழைத்து சண்டையும் அன்பையும் காட்டி வருகிறார்.

rachitha_mahalakshmi-1

இந்நிலையில் நேற்றைய முன் தினம் உள்ளே சென்ற ரச்சிதா பலரின் நடந்ததை பற்றி பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது காதல் சர்ச்சையில் ராபர்ட் மாஸ்டருடன் கிசுகிசுக்கப்பட்டார். ராபர்ட் மாஸ்டரும் ரச்சிதாவை தன் வலையில் சிக்க வைக்க பிளான் போட்டும் அதை கண்டுகொள்ளாமல் இருந்தார் ரச்சிதா.

rachitha_mahalakshmi-1

இந்நிலையில், என்னை பொறுத்தவரை எனக்கு நீங்கள் செய்தது தப்பாக தெரியவில்லை. யாருக்கும் யாரை வேண்டுமானாலும் பிடிக்கலாம். இனிமே எப்பவும் நீங்கள் என்னுடைய நண்பர் தான் என்று காதல் கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரச்சிதா.

  • hans zimmer composing music for ramayana movie starring sai pallavi சாய் பல்லவி படத்தில் இணைந்த கிரிஸ்டோஃபர் நோலன் பட இசையமைப்பாளர்? வெளியான மாஸ் வீடியோ!