அவ்வை சண்முகி படத்தில் சிவாஜி… கதாநாயகியாக அந்த சீரியல் நடிகை : ச்சே வேற லெவலா இருந்திருக்கும்!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2023, 3:32 pm

1996ல் வெளியான படம் தான் அவ்வை சண்முகி. நடுத்தர பெண் வேடத்தில் கமல் சும்மா பின்னி பெடலெடுத்திருப்பார். படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை செம காமெடி.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில் கிரோஷி மோகன் கதை எழுதியிருப்பார். கதாநாயகியாக மீனா, ஹீரா நடித்திருப்பார்.

இந்த படம் 1979ல் வெளியான அமெரிக்க படமான Kramer vs Kramer படத்தின் தழுவல். மேலும் Mrs.Dougtfire படத்தில் இருந்தும் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டது.

இந்த படத்தில் முதலில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது நடிகர் சிவாஜி தான். அவர் நடித்திருந்தார் இன்னும் சூப்பரா அமைந்திருக்கும் என்பதே அனைவரும் தெரிந்ததே.

அதே போல ஹீரா வேடத்தில் நடிக்க வேண்டியது சீரியல் நடிகை ஸ்ரீ துர்கா. அவர் மட்டும் இந்த படத்தில் நடித்திருந்தால் அவருக்கு சினி கேரியரில் நல்ல இடம் அமைந்திருக்கும்.

மேலும் கமலின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் தான் இந்த படத்தில் மகளாக நடிக்க வேண்டியது. பின்னர் சில காரணங்களால் குழந்தை நட்சத்திரமாக அன்ன்(ANN) நடித்திருந்தார்.

இந்த படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. மேலும் தமிழ்நாடு அரசின் சிறந்த மேக்கப் ஆர்டிஸ்ட் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திர விருதும் கிடைத்தது.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!