பாஜகவில் உள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகிய சிபி ராதாகிருஷ்ணன்… ராஜினாமா கடிதத்தை ஏற்ற அண்ணாமலை!

Author: Udayachandran RadhaKrishnan
15 February 2023, 2:11 pm

ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

ஆந்திரா, ஜார்க்கண்ட் உட்பட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமனம் செய்து உத்தரவிட்டார்.

இவர்களில் 6 பேர் புதிதாக நியமிக்கப்பட்டனர். 7 ஆளுநர்கள் வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்டனர். இதில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் வருகை வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கடிதத்தை வழங்கினார்.

இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில்;- இன்று சி.பி.ராதாகிருஷ்ணன் பாஜக அலுவலகத்திற்கு வந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளார். அவரின் விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டியளிக்கையில்;- ஜார்க்கண்ட் அற்புதமான மாநிலம், அதிகமான பழங்குடி, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்கின்ற மாநிலம். அவர்களுக்கு உழைக்கின்ற வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளனர். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

  • santhosh narayanan shared the comic incident viral on internet சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?