பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் திரையுலகினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 பிப்ரவரி 2023, 9:05 காலை
Actor Dead - Updatenews360
Quick Share

பிரபல நகைச்சுவை நடிகர் மயில் சாமி மாரடைப்பால் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57. ஏராளமான தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் மயில் சாமி நடித்துள்ளார்.

1984-முதல் சிறு சிறுவேடங்கள் மற்றும் நகைச்சுவை, குண்ச்சித்திர கதாப்பாத்திரங்களில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் மயில்சாமி நடித்துள்ளார். விவேக், வடிவேலு உள்ளிட்ட முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் மயில்சாமி நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

மயில்சாமியின் உடல் அஞ்சலிக்காக சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மயில் சாமியின் மறைவுக்கு திரயுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  • விஜய் சொன்னது சரிதான்.. ஜெயக்குமார் போடும் கணக்கு!
  • Views: - 391

    1

    0