சில்க் ஷூட்டிங் இல்லாத நேரங்களில் இங்க தான் இருப்பார்: ரகசியத்தை வெளியிட்ட கங்கையமரன்..!

Author: Vignesh
4 March 2023, 10:30 am

1980களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து இளைஞர்களின் மத்தியில் கனவுக்கன்னியாக இன்றும் வாழ்ந்து வருபவர் நடிகை சில்க் ஸ்மிதா.

படத்துக்காகத்தான் கவர்ச்சியை காட்டி அதிக சொத்துக்களை சேர்த்தாலும், இல்லாதவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்பவர். திடிரென தற்கொலை செய்த அவரின் மரணம் இன்றும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளாகவே உள்ளன.

Gangai Amaran - updatenews360

இதனிடையே, இசையமைப்பாளர் கங்கை அமரன் ஒரு பேட்டியில் சில்க் ஸ்மிதாவை பற்றி சில தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், தானும், சில்க் ஸ்மிதாவும் நெருங்கிய நண்பர்கள் என்றும், ஷூட்டிங் இல்லாத நேரங்களில் தனக்கு சில்க் போன் செய்து வீட்டிற்கு வரட்டுமா என்று கேட்பார் என தெரிவித்துள்ளார்.

silk smitha - updatenews360 d

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், வீட்டிற்கு வந்து தன் மனைவியோடு சமையல் செய்து, சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருப்பார் எனவும், அப்போது பிரேம்ஜி மிகவும் சின்ன பையனாக இருப்பான் தன் மகனைப் பார்த்து இவனை நான் கல்யாணம் பண்ணிகிட்டுமா? என்று கேட்பார் எனவும், தானும் ஓ…கே.. என்று தலையாட்டி சிரிப்பேன் எனவும், அந்த நாட்களை தன்னால் மறக்கவே முடியாது என தெரிவித்துள்ளார்.

silk smitha - updatenews360

தன்னை எங்கு பார்த்தாலும் சில்க், ஓடி வந்து கட்டி பிடித்துக் கொள்வார் எனவும், தன்னை மச்சான் என்று தான் சில்க் அழைப்பார் என தெரிவித்துள்ளார்.

அந்த அளவுக்கு தன்னும் தன் குடும்பத்துடனும், சில்க் நெருங்கி பழகினார் என்றும், சில்க்கை பார்க்கும்போது ஒரு கிராமத்திலிருந்து வந்தவர் போல் தெரியாது எனவும்,
இன்று வரை அவரை போல் ஆடையிலும் சரி, முக அலங்காரத்திலும் சரி யாராலும் ரசித்து ரசித்து தன்னை மெருகேற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.

silk smitha - updatenews360 d

சில்க் அந்த அளவுக்கு தன்னை தானே மெதுவாக செதுக்கி செதுக்கி சினிமாவிற்காகவே படைக்கப்பட்டவள் போல் மாறினார் எனவும், சில்க் இறந்த போது, தன்னால் ஜீரணிக்க முடியவில்லை எனவும், ஒரு வார காலம் காய்ச்சலில் படுத்துவிட்டேன் என வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.

silk smitha - updatenews360 d
  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!