தலைமுடியில் இருந்து ஹோலி வண்ணங்களை இயற்கை முறையில் அகற்றுவது எப்படி???

Author: Hemalatha Ramkumar
8 March 2023, 7:38 pm

ஹோலி பண்டிகையை அனைவரும் சந்தோஷமாக கொண்டாடி இருப்பீர்கள். ஆனால் ஹோலியில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள் முடிக்கு நல்லதல்ல. ஹோலி வண்ணங்கள் உங்கள் தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கும். அவற்றில் ஈயம், துத்தநாகம், காப்பர் சல்பேட், அலுமினியம் புரோமைடு, பாதரசம் மற்றும் கல்நார் போன்ற பல்வேறு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. இவை உங்கள் தலைமுடியை வறண்டு, உடையக்கூடியதாக மாற்றும்.

தலைமுடியில் இருந்து ஹோலி நிறங்களை அகற்றுவதற்கான வழிகள்:-

வினிகர் மற்றும் பால்
ஹேர் மாஸ்க்

1 டீஸ்பூன் கிளிசரின், 1 டீஸ்பூன் வினிகர், சிறிதளவு பால், ஷாம்பு மற்றும் கண்டிஷனர் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாகக் கலந்து பேக் செய்யவும். இதை உங்கள் தலைமுடியில் தடவி சுமார் 20 நிமிடம் விட்டு பின் அலசவும்.

முட்டை மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்
கூந்தலுக்கு தயிர் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். எனவே, உங்கள் தலைமுடியை வளர்க்க, இரண்டு தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு முட்டையை கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடியின் வேர்களில் இருந்து நுனி வரை தடவி சுமார் 30 நிமிடங்கள் வைத்திருக்கவும். அதன் பிறகு, உங்கள் தலைமுடியை ஷாம்பூவுடன் கழுவலாம்.

கற்றாழை ஜெல்:
கற்றாழை முடி வளர்ச்சிக்கு நல்லது. ஆனால் வறட்சியை நீக்குகிறது. உங்கள் உச்சந்தலை மற்றும் வேர்களில் கற்றாழை ஜெல்லை நீங்கள் தடவலாம். 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பின்னர் கழுவவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…