மெலிந்து உயிரற்று கிடக்கும் கூந்தலை அடர்த்தியாக்கும் தந்திரம்!!!

Author: Hemalatha Ramkumar
12 March 2023, 12:50 pm
Quick Share

கடைகளில் ஏராளமான முடி தயாரிப்புகள் கிடைத்தாலும், அவை இயற்கை பொருட்களுக்கு ஈடாகாது. உங்களுக்கு தேவையான அனைத்தும் உங்கள் சமையலறையிலேயே உள்ளது. மசாலாப் பொருட்கள் வெறும் சுவையூட்டும் பொருட்களாக மட்டும் இல்லாமல், பல வீட்டு வைத்தியங்களில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் வெந்தய விதைகள் செரிமானத்திற்கு உதவுவது முதல் முடி உதிர்வைக் குறைப்பது வரை ஏராளமான நன்மைகளை வழங்குகிறது.

கூந்தல் உதிர்வு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு வெந்தய விதைகள் மிகவும் பயனுள்ள தீர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வெந்தய விதைகளில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும் இது பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்களின் களஞ்சியமாக உள்ளது. வெந்தய விதைகளில் அதிக புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் உள்ளது. இது முடி உதிர்தல் மற்றும் பொடுகுக்கு எதிராகவும், முடி வறட்சி, வழுக்கை மற்றும் முடி உதிர்தல் போன்ற பல்வேறு உச்சந்தலை பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதாகவும் அறியப்படுகிறது.

முடி உதிர்வு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு, நீங்கள் பின்வரும் முறையைப் பின்பற்றி ஹேர் மாஸ்க் ஒன்றைத் தயாரிப்பது பயன்படுத்தலாம். இதற்கு 2 தேக்கரண்டி வெந்தய விதைகளை தண்ணீரில் ஊறவைத்து இரவு முழுவதும் குளிர்ந்த இடத்தில் வைக்கவும். விதைகளை அதே தண்ணீரைப் பயன்படுத்தி பேஸ்டாக அரைக்கவும். இதை உங்கள் தலைமுடியின் வேர்களில் தடவி, மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் விடவும். பின்னர் லேசான ஷாம்பூவைக் கொண்டு உங்கள் தலைமுடியைக் கழுவவும்.

குறிப்பு: வெந்தய பேஸ்ட்டுடன், நீங்கள் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து, பொடுகு பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தலாம்; அல்லது மிருதுவான, பளபளப்பான கூந்தலுக்கு 1 தேக்கரண்டி தேங்காய் பால் சேர்க்கலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 231

0

0