பட வாய்ப்பு இல்லாததால் ரூட்டை மாற்றிய நடிகை ஸ்ரீதிவ்யா.. அதிர்ந்து போன ரசிகர்கள்..!

Author: Vignesh
20 March 2023, 4:15 pm

நடிகை ஸ்ரீதிவ்யா( Sri Divya ) ஒரு தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட நடிகை. நடிகை ஸ்ரீ திவ்யா சிறு வயதிலிருந்தே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர்.

இப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய துவங்கியது.

மேலும் ஸ்ரீதிவ்யா “ஜீவா”, “வெள்ளைக்காரதுரை”, “காக்கி சட்டை”, “பென்சில்”, “பெங்களூரு நாட்கள்”, “மருது”, “காஷ்மோரா”, “மாவீரன் கிட்டு”, என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்துள்ளார்.

ஆரம்பம் இவருக்கு அமோகமாக இருந்த போதிலும், இவர் கடந்த சில ஆண்டுகளாக நடித்த தமிழ் படங்கள் படு தோல்வியை தழுவியது. தற்போது தெலுங்கு படங்கள் மூலமாக தமிழிலும் ஒரு ரவுண்டு வரலாம் என காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நம்ம வீட்டு பொண்ணு போல இருக்கும் ஸ்ரீ திவ்யா, சினிமாக்களில் கூட மாடர்ன் உடையில் காட்டாத கவர்ச்சியை, ஆரம்ப காலத்தில் சினிமா போட்டோஷூட்டில் ஸ்ரீ திவ்யா கவர்ச்சி காட்டி புகைப்படங்கள் தற்போது வைரலாகி வந்தன.

இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு ஸ்ரீதிவ்யா இன்ஸ்டாகிரமில் தனது போட்டோவை பதிவிட்டு இருக்கிறார். அது மட்டுமின்றி அவர் தற்போது இருக்கும் கிராமத்தின் போட்டோவையும் வெளியிட்டு உள்ளதால், பட வாய்ப்பு இல்லாததால் கிராமத்தில் செட்டில் ஆகிட்டாங்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விரைவில் கம்பேக் கொடுக்க வேண்டும் என ஸ்ரீதிவ்யாவிடம் ரசிகர்கள் கமெண்டில் கேட்டு வருகின்றனர்.

  • a fan comment on vijay tweet about operation sindoor make fans angry ஆப்ரேஷன் சிந்தூர்- விஜய்யின் டிவிட்டர் பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்! என்னவா இருக்கும்?