குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷிவாங்கிக்கு இவ்வளவு சம்பளமா? ஷாக்கான ரசிகர்கள்!

Author: Shree
7 April 2023, 10:07 am

பேசும் போது கீச் கீச் குரலும் பாடும்போது குயில் போன்ற குரலும் கொண்ட வித்தியாசமான திறமை கொண்டவர் ஷிவாங்கி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இவரது குரலுக்கும் வெகுளித்தனமான பேச்சுக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பிரபலத்தை வைத்து ‘குத் வித் கோமாளியில்’ வாய்ப்பு கிடைத்தது. அதில் கோமாளியாக தன்னுடைய நகைச்சுவையான திறமையால் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

விஜய் டிவியில் கிடைத்த புகழ் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் பாடவும், நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன. சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து மக்களை மகிழ்வித்தார். இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷிவாங்கி நாள் ஒன்றிற்கு வெறும் 20 ஆயிரம் தான் சம்பளமாக வாங்குகிறாராம்.

இதில் அதிகப்படியான தொகையை சம்பளமாக பெறுவது மைம் கோபி தானாம். இவர் ஒரு எபிசோட்டிற்காக சுமார் 50 ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம். அவருக்கு அடுத்து நடிகை ஷெரின் 35 ஆயிரம் ரூபாயும், நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவுக்கு 35 ஆயிரமும், நடிகை விசித்ராவுக்கு 30 ஆயிரம் சம்பளமாகவும் பெறுகிறார்கள்.

மேலும் தமிழ் பேசும் பிரெஞ்சி பிரபல நடிகை ஆண்ட்ரியாவுக்கு 30 ஆயிரம் சம்பளமும், வலிமை படத்தில் அஜித் தம்பியாக நடித்த நடிகர் ராஜ் ஐயப்பனுக்கு 26 ஆயிரம் சம்பளமும் கொடுக்கப்படுகிறது. மேலும் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் விஜே விஷாலுக்கு 25 ஆயிரமும் வாங்குகிறார்கள் இதில் மிகவும் குறைவான சம்பளம் வாங்குபவர் ஷிவாங்கி என்பதை பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

  • retro movie world wide collection report அபாய கட்டத்தை தாண்டிய ரெட்ரோ? என்னைய காப்பாத்திட்டீங்க-சூர்யா ஹேப்பி அண்ணாச்சி!