ஆஸ்கர் பரிந்துரைக்கு சென்ற ஜீன்ஸ் படம் – குறுக்க வந்து கெடுத்த அஜித்?

Author: Shree
24 April 2023, 7:38 pm

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஜீன்ஸ். காதலை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் மற்றும் நாசர் முக்கிய மற்றும் இரட்டை வேடங்களில் நடித்திருந்தனர்.

மேலும் இவர்களுடன் ராஜூ சுந்தரம், லட்சுமி, மற்றும் தென்னிந்திய திரைப்படங்களின் பிரபல நடிக நடிகையர் முக்கிய கதாபாத்திரங்களின் உறவுக்காரர்களாக முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் முதலில் நடிக்க அஜித்திடம் தான் பேச்சுவார்த்தை நடந்ததாம்.
ஆனால், பெப்சி ஊழியர்களுக்கு ஆதரவாக அஜித் பேசியதால் அவரால் நடிக்க முடியாமல் போனது.

இதை அடுத்து பிரபுதேவா நடிக்க இருந்தது. அவரும் சில பிரபுதேவா இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதற்கு பிறகு தான் இந்த படத்தில் பிரசாந்த் நடித்தார். இந்தப்படம் மாபெரும் ஹிட் அடித்ததால் அப்போவே 71வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவின் கீழ் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்டது. அஜித் இந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டார் என அப்போதே கோலிவுட்டில் முணுமுணுக்கப்பட்டது.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…