போனி கபூர் யாருன்னே தெரியாது… ஆனால் அவர் மனைவியுடன் நான் – மிஷ்கினின் சர்ச்சை பேச்சு!

Author: Shree
25 April 2023, 10:38 am

அன்பை ஆயுதமாக்கி அறத்தை சொல்லும் படங்களை எடுத்துப்பதில் திறமைமிக்கவர் இயக்குனர் மிஸ்கின். இதயம், காதலர் தினம், காதல் தேசம் ஆகிய படங்களின் இயக்குநரான கதிரிடம் தான் உதவி இயக்குநராக பணியாற்றி சித்திரம் பேசுதடி திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலே ஏகோபித்த வரவேற்பை பெற்ற மிஷ்கின் தமிழ் சினிமா ரசிகர்களால் கவனம் ஈர்த்தார்.

தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல்வேறு விசித்திரமான படங்களை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படம் வருகிற மே மாதம் 30 தேதி வெளியாகவுள்ளது.

bony kapoor

சமீப காலமாக இயக்குனர் மிஷ்கின் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களை பல விழா மேடைகளில் விமர்சிக்கும்போது, சம்பந்தப்பட்டவர்களை ஒருமையில் பேசியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அந்தவகையில் தற்போது டைனோசர்ஸ் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்துக்கொண்டு பேசிய மிஷ்கின், எனக்கு போனி கபூர் யார் என்றே தெரியாது. ஆனால், அவரது மனைவி ஸ்ரீ தேவியை எனக்கு நன்றாக தெரியும்.

அவருடன் ஒரு படத்திலாவது நான் உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன் ஆனால், முடியாமல் போனது என குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சையாக பேசியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் போனி கபூர் கலந்துக்கொண்டு அவரின் அருகிலேயே அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் கடைசியாக போனி கபூர் உடன் அருகில் அமர்ந்து இருந்தது பெருமையாக உள்ளது என பேசி சமாளித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!