வீட்ல அந்த தப்பு பண்ணிட்டு ஷூட்டிங் வராதே… கார்த்தியிடம் கறாரா கூறிய மணிரத்தினம்!

Author: Shree
25 April 2023, 11:06 am

தென்னிந்திய சினிமாவின் வரலாற்று வெற்றி திரைப்படமான பாகுபலி 1,2, ஆர்.ஆர்.ஆர், கேஜிஎப் 1,2 என போன்ற வேறு மொழி திரைப்படங்கள் பிரமாண்டமாக வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. தமிழ் சினிமாவின் கல்வெட்டுகளில் இந்த படங்களின் வெற்றியை பதிக்கலாம். காலங்கள் கடந்தும் பேசும் வகையில் அதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தமிழ் மொழியில் வராதா? என ரசிகர்களின் ஏக்கங்களை நிறைவேற்றும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினம் தான் பொன்னியின் செல்வன்.

அதனை இயக்குனர் மணிரத்னம் தற்போது ஒரு பிரம்மாண்ட திரைப்படமாக இயக்குகிறார் என்றவுடன் ரசிகர்களிடம் ஆர்வம் அதிகமானது. அதேபோல் இத்திரைப்படம் 2 பாகமாக தயாராகிறது. முதல் பாகம் வெளியாகி வெற்றி வாகை சூடியதை அடுத்து அந்த 2 பாகத்திற்கான சூட்டிங் முடிந்து விட்டது. இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறார்.

அந்தவகையில் சமீபத்திய நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய கார்த்தி… மணிரத்தினம் ஷூட்டிங்கில் மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக நடந்துக்கொள்வார் என கூறினார். “நான் ஒவ்வொரு முறையும் ஷூட்டிங் செல்லும்போது படத்தின் ஸ்கிரிப்டையும் புத்தகத்தில் உள்ள சீனையும் படித்து விட்டுத்தான் செல்வேன். அப்படியிருந்தும் படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு காட்சி குறித்து மணிரத்னமிடம் சந்தேகம் கேட்டேன். இதைக்கேட்ட இயக்குநர், “இது புத்தகத்தில் இடம் பெற்ற காட்சியா, அல்லது ஸ்கிரிப்டில் உள்ள காட்சியா?” என கேட்டார். சில சமயங்களில், “புத்தகம் படிப்பதை நிறுத்திவிட்டு கொடுத்திருக்கிற ஸ்கிரிப்டை படி..” புத்தகத்தை மட்டும் படிச்சிட்டு நேரா இங்க வந்திடாதே என கூறி திட்டுவார். “என நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்துக்கொண்டார்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…