அரசுத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் வேலை குறைப்பு :அரசு அதிரடி அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2023, 11:11 am
Govt Office - Updatenews360
Quick Share

அரசுத் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 2 மணி நேரம் வேலை குறைப்பு : மாநில அரசு அதிரடி அறிவிப்பு!!

புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடிகளில் இருந்து மக்களை காப்பது குறித்த பயிலரங்கம் தனியார் உணவகத்தில் தொடங்கியது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக துணைநிலை ஆளுநர் தமிழிசை முதலமைச்சர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் அமைச்சர் தேனி ஜெயக்குமார்,ஆகியோர் கலந்து கொண்டு வெறிநாய்க்கடிகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.

அப்போது பேசிய முதலமைச்சரங்கசாமி, நோய்களில் மிகவும் கொடுமையானது வெறி நாய்க்கடியாகும். எனவே வெறி நாய் கடியை தடுப்பதற்காக புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையான தடுப்பூசி மற்றும் மருந்துகள் கையிருப்பில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் வெறிநாய்க்கடி நோய் இல்லாத மாநிலமாக புதுச்சேரியை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை..
புதுச்சேரியில் வெறிநாய்க்கடி நோயை தடுப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் தனி தொலைபேசி தொடர்பு எண் ஏற்படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது என்று கூறினார்.

அது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கோப்புகளில் கையெழுத்து விட்டுள்ளேன்.

இது விரைவில் அமலுக்கு வரும் என்று குறிப்பிட்ட அவர் இதை தனியார் நிறுவனங்களும் பின்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி.. அதாவது வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை அன்று 9 மணிக்கு வேலைக்கு வரும் பெண்கள் 11 மணிக்கு வந்தால் போதும் என்ற நடைமுறையை புதுச்சேரியில் அரசு விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Views: - 669

0

0