சரிந்த விக்கெட்டுகள்… சாதித்த மோகித்.. மிரட்டும் குஜராத் : சளைக்காமல் டஃப் கொடுக்கும் டெல்லி…!!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2023, 10:06 pm

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய 44-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட், கேப்டன் டேவிட் வார்னர் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்திலேயே பிலிப் சால்ட் ரன் எதுவும் எடுக்காமல் (0) கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த ஓவரிலேயே கேப்டன் வார்னர் 2 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ரூசோவ் 8 ரன்னிலும், மனீஷ் பாண்டே 1 ரன்னிலும், பிரியம் கர்க் 10 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
தொடர்ந்து வந்த அக்சர் படேல் , அமான் கான் இணைந்து சிறப்பாக விளையாடினர். நிலைத்து ஆடி இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அக்சர் படேல் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ரிபல் படேல் , அமான் கான் இருவரும் இனைந்தனர். பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர் . சிறப்பாக விளையாடிய அமான் கான் அரைசதம் அடித்தார். இறுதியில் 20 ஓவர்களுக்கு 8விக்கெட் இழப்புக்கு 130ரன்கள் டெல்லி எடுத்தது. குஜராத் சார்பில் ஷமி 4 விக்கெட் வீழ்த்தினார். மோகித் 2 விக்கெட் எடுத்தது மூலம் 100 விக்கெட்டுகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.

தொடர்ந்து131 ரன்கள் இலக்குடன் குஜராத் அணி வீரர்கள் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே சாஹா டக் அவுட் ஆக, உடனிருந்த கில் 6 ரன்னில் பெவிலியின் திரும்பினார்.

குஜராத்துக்கு இணையாக டெல்லி பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். அடுத்து வந்த குஜராத் அணி கேப்டன் ஹர்திக் அதிரடி காட்டினார். அவருடன் இணை ஜோடியான விஜய் ஷங்கர் 6 ரன்னில் அவுட் ஆனார்.

தொடர்ந்து வந்த மில்லர், கேப்டனுக்கு தோள் கொடுத்து ஆடி வருகிறார். ஒரு கட்டத்தில் மில்லரும் டக் அவுட் ஆக… குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது . கேப்டன் ஹர்திக் 19 ரன்னும், அபினவ் மனோகர் 1 ரன் எடுத்து களத்தில் உள்ளனர்.

  • Ravi Mohan - Kenisha made an important announcement at a party... celebrities congratulated பார்ட்டி வைத்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட ரவி மோகன் – கெனிஷா… திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து!