டாஸ்மாக் கடைகளை மூடி விட்டு கல் இறக்க வேண்டும் : தமிழக அரசுக்கு அண்ணாமலை யோசனை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2023, 2:55 pm

சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அக்போது பேசிய அவர், காவல்துறையின் நலத்தை பார்க்க வேண்டும்.
கமிஷன் அரசு கமிஷனுக்காக வேலை செய்கின்றனர். அமைச்சர்கள் வருமானத்தை ஈட்ட முடியுமா என்பதைத்தான் பார்க்கிறார்கள்.

சோலார் சப்சிடி கொடுப்போம் என திமுக அரசு தெரிவித்தது. ஆனால் எத்தனை வீட்டிற்கு கொடுத்துள்ளார்கள். 2021-22 ,22-23 ஆண்டில் 22% விழுக்காடு மது விற்பனை அதிகரித்துள்ளது. சாராயம் பிடிப்பதும் உயர்ந்துள்ளது. 75% டாஸ்மாக்குகளை மூட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கல் விற்பனை செய்ய வேண்டும்.

வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்த பிறகு விழுப்புரத்தில் மாநாடு நடைபெறும். அந்த மாநாட்டில் மக்கள் மத்தியில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

காங்கிரசின் இலவசம். சித்தராமையா இலவசத்தில் மூன்று மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டு விட்டு வேறு செய்கின்றனர்.

பாஜக அரசு பொருளாதாரமான நாட்டை கொடுத்து சென்றதால் கர்நாடகாவில் பட்ஜெட் நன்றாக இருக்கும். 2000 ரூ நோட்டு புழகத்தில் இல்லை. 2000 ரூபாய் நோட்டு வைத்துள்ளவர்கள் பதுக்கி வைத்தவர்கள். 2000 ரூபாய் நோட்டால் கொள்ளையடித்தவர்களுக்கு பிரச்சனை.

கேள்விகள் கேட்டால் ஐயாயிரம் கடைக்கு போனாயா என பத்திரிக்கையாளர்களை கிண்டல் பண்ணுகின்றனர். 2024 ல் தொண்டனாக வேலை செய்வேன். 2024 தேர்தலில் டெல்லி அரசுக்கு செல்ல எனக்கு விருப்பமில்லை.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?