மருந்தாக மட்டுமல்ல அழகு சாதன பொருளாகும் பயன் தரும் துளசி இலைகள்!!!

Author: Hemalatha Ramkumar
23 May 2023, 7:48 pm
Quick Share

துளசி செடியானது ஏராளமான ஆயுர்வேத மருத்துவ பயன்களை கொண்டுள்ளது என்பது பலருக்கு தெரியும். துளசிச் செடியில் வன துளசி ஊதா இலை துளசி மற்றும் கருந்துளசி போன்ற வகைகள் காணப்படுகின்றன. துளசி செடியின் இலைகள் மட்டுமின்றி, அதனுடைய வேர் தண்டு மற்றும் பூ ஆகியவையும் மூலிகையாக பயன்படுகிறது. இதனாலேயே துளசி செடியானது மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய துளசிச் செடியின் பயன்களில் ஒரு சிலவற்றை இங்கே காண்போம்.

துளசி இலைகளை தேய்த்து குளிப்பதால் நமது சருமத்திற்கு தீங்குகளை ஏற்படுத்தக்கூடிய கிருமிகளை அழிக்கிறது. துளசியில் இயற்கையாகவே உள்ள மருத்துவ குணம், உடலில் உள்ள திசுக்களுக்கு தொற்று அல்லது பாதிப்புகள் ஏற்படும்போது அதை சமாளிக்கும் ஆற்றலை வழங்குகிறது.

துளசி இலை இளநரையை குறைக்கிறது. பொடுகு, மாசு மற்றும் புற ஊதாக் கதிர்களில் இருந்து முடியை பாதுகாத்து ஆரோக்கியமாக வைக்க உதவுவதாக ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

துளசி இலைகளை காலையில் வெறும் வயிற்றில் நன்றாக மென்று சாப்பிடுவது சளி மற்றும் காய்ச்சலை போகிறது. ஒற்றை தலைவலியால் அவதிப்படுவோருக்கு துளசி இலைகள் நல்ல மருந்தாக அமைகிறது. சிறிது துளசி இலை மற்றும் சந்தனம் ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து நெற்றியில் தடவினால் தலைவலி சிறிது நேரத்தில் குணமடையும்.

துளசி இலைகளை நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து சூடு குறைந்த உடன் தொடர்ந்து ஐந்து நாட்கள் வரை குடித்து வந்தால் தொண்டையில் இருக்கக்கூடிய புண்கள் குணமடையும். மேலும், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

துளசி இலைகளை நன்றாக உலர வைத்து அரைத்து பொடி செய்து அந்த பொடியினை பல் துலக்குவதற்கு பயன்படுத்தலாம். இது வாயில் உள்ள கிருமிகளை போக்கி வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. மேலும், பல் சொத்தை, பல்வலி, பல் ஈறுகளில் வீக்கம் மற்றும் வலி ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.

துளசி இலைகளின் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் சிறுநீர் பாதை வழியாக வெளியேற்றும்.

துளசி இலையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், புற்று நோய் ஏற்படும் அபாயம் குறைகிறது. துளசியில் இருக்கும் அன்டி ஆக்ஸ்சிடன்ட்கள் , புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Views: - 289

0

0