விஜய்க்கு ஜோடியாகும் விஜய் சேதுபதி மகள்… தெறிக்கவிடும் தளபதி 68 அப்டேட்!

Author: Shree
26 May 2023, 10:13 am

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . இதில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா, கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் வருகிற ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கலாம்.

இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாக உள்ளதால். குறிப்பாக சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் போன்று தளபதி 68 அரசியல் பேசும் படமாக அமையலாம் என எதிர்பார்க்கலாம்.

மேலும் வெங்கட் பிரபு படம் என்றாலே அதன் பின்னணியில் Game, Sixer, Reunion, Politics, Diet, Holiday, Hangover, Quickie, Hunt போன்ற ஆங்கில வார்த்தைகள் இருக்கும் அந்த வகையில் இந்த படத்திற்கு அவர் என்ன ஆங்கில டைட்டில் வைக்கப்போகிறார் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் இப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் எஸ். ஜே சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி நடிக வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது. இவர் விஜயின் தீவிர ரசிகை என்பது பல நேர்காணலில் கூறியிருக்கிறார். வெறும் 19 வயதே ஆன இவர் 48 வயதாகும் விஜய்க்கு ஜோடியாக நடிப்பது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. நடிகை கீர்த்தி ஷெட்டி உப்பனா என்ற தெலுங்கு திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…