சமூக கட்டமைப்பிற்கு சவால் விடும் பொது சிவில் சட்டத்தை கைவிடுங்க : முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2023, 5:02 pm

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிடக்கோரி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர், ரிதுராஜ் அவஸ்தி அவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.

அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின், நமது இந்தியா பன்முகத்தன்மை கொண்ட சமூகக்கட்டமைப்பிற்கு பெயர் பெற்றது, அப்படிப்பட்ட இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டுவருவதை தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

மேலும் மதச்சார்பின்மை முக்கிய பகுதியாக உள்ள நமது அரசியலமைப்பைக் கொண்ட இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சி, நாட்டில் வகுப்புவாத ஒற்றுமையின்மைக்கும், குழப்பத்திற்கும் வழிவகுக்கும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஒரே மாதிரியான சட்டத்தை திணிப்பதை விட, வேற்றுமையில் ஒற்றுமை உணர்வை வளர்ப்பதில் கவனம் செலுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…