வில்லங்க சான்றிதழ் வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம்… இதுல ஆஃபர் வேற… வசமாக சிக்கிய பதிவுதுறை தலைமை எழுத்தர்.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
14 July 2023, 4:59 pm

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் கருவலுரை சேர்ந்த ஒரு நபர் வில்லங்கச் சான்று பெற வந்துள்ளார். அந்த நபரிடம் அவிநாசி சார் பதிவாளர் அலுவலகம் பணிபுரியும் தலைமை எழுத்தர் தனபால் என்பவர் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தலைமை எழுத்தர் தனபால் வீடியோ எடுத்த அந்த நபரிடம் வில்லங்க சான்று பெற ரூ. 121 கட்டணம் செலவு ஆகும் என்று கூறுகிறார். எதிரில் உள்ள நபர் வேறு ஏதும் உங்களுக்கு கட்டணம் உள்ளதா என்று கேட்கிறார். அதற்கு உதவியாளர் தனபால் பத்தாயிரம் ரூபாய் பணம் செலவாகும். அதுபோக அந்த வில்லங்கம் சான்று பெற வந்தவரிடம் அந்த பத்தாயிரம் ரூபாய்க்கு என்னென்ன செலவு இருக்கிறது என்று கணக்கும் கூறுகிறார்.

மேலும், சாதாரணமாக ஒரு வில்லங்க சான்றுக்கு ஆயிரம் ரூபாய் ஆகும் 20 பேப்பர் என்பதால் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் அதற்கு மேல் செலவாகலாம் என்று கூறுகிறார். வில்லங்கம் பேறும் சேவைக்கு அரசு தரப்பில் 121 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த லஞ்சம் கேட்கும் உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!