அரசுயல்வாதிக்கு இருக்கவேண்டிய எந்த குணமும் விஜய்யிடம் இல்ல – புட்டு புட்டு வைத்த மூத்த பிரபலம்!

Author: Shree
16 July 2023, 8:26 pm

சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.

அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து மக்கள் சேவையில் இறங்கினர். அதே போல் அண்மையில் விஜய் 234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா நடத்தி அரசியல் என்ட்ரி குறித்து பேசி தமிழகம் முழுக்க கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ள மூத்த பத்திரிகையாளர் கே. ராஜன், விஜய்யிடம் அரசியல்வாதிக்கு இருக்கவேண்டிய எந்த குணமும் இல்லை. இப்படியெல்லாம் இருந்தால் நடிக்கும் படங்கள் தான் ஹிட் ஆகுமே தவிர அரசியலில் இதெல்லாம் வேலைக்கே ஆகாது. எனவே விஜய் ஒரு அரசியல்வாதியாக நல்லா சிரிச்சி பேசணும், அன்பா பேசணும், மக்களோடு நெருங்கி பேசணும், ஏழைகளிடம் இறங்கி பேசணும். இது எதுவுமே விஜய்யிடம் இல்லை. ஒன்லி சினிமா பாப்புலாரிட்டி மட்டும் தான் இருக்கு. எனவே விஜய் தனது குணத்தையெல்லாம் மாற்றிக்கொண்டு அரசியலுக்கு தகுந்தாற்போல் நடந்துக்கொள்ளவேண்டும் என ராஜன் கூறியுள்ளார்.

  • a fan comment on vijay tweet about operation sindoor make fans angry ஆப்ரேஷன் சிந்தூர்- விஜய்யின் டிவிட்டர் பதிவால் கொதித்தெழுந்த ரசிகர்கள்! என்னவா இருக்கும்?