பிறந்தநாள் ஜோர்…. பிரம்மாண்ட பரிசு கொடுத்து கணவரை மெர்சலாக்கிய ஆல்யா மனசா!

Author: Shree
19 July 2023, 9:10 am

வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் பிரபலங்கள் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைகிறார்கள். அப்படி சின்னத்திரையில் நடித்து, நிஜ வாழ்க்கையில் இணைந்த ஜோடி தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரில் முதன்முறையாக ஜோடியாக நடித்தார்கள். அதில் அவர்களுக்கு ஏற்பட்ட நட்பு அப்படியே காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.

இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். பிரசவத்திற்காக ஆல்யா மானசா கமிட்டாகி இருந்த ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாகி பழைய ஆல்வாக மாறி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். படங்களில் அமெரிக்க மாப்பிள்ளையாக கெஸ்ட் ரோலில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த நடிகர் ரிஷி தான் இனியா சீரியலில் ஹீரோவாக நடித்துள்ளார்.

ரிஷி – ஆல்யா மானசாவின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்கவுட் ஆகி மக்கள் எல்லோருக்கும் பிடித்துப்போக அந்த சீரியல் TRPயின் உச்சத்தை தொட்டு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கணவர் சஞ்சீவ்வின் பிறந்தநாளுக்கு ஆல்யா மனசா மஹேந்திரரா ஜீப் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். அதன் விலை கிட்டத்தட்ட ரூ.15 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சஞ்சீவ் மனைவி கொடுத்த பிரம்மாண்ட பரிசு பார்த்து மெர்சலாகி அந்த ஜீப் உடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…