ஸ்டைலிஷ் தாத்தா…. வயசு 68 ஆகியும் வாலிபம் குறையாத கமல் – வெளிநாட்டில் Mass Pose!

Author: Shree
19 July 2023, 6:09 pm

கடந்த ஐந்து தசாப்தங்களில் மிக உயர்ந்த இந்திய நடிகராக கமல்ஹாசன் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ மூலம் ஒரு பெரிய சாதனையை செய்து உள்ளார். அனிருத் இசையில் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில், சூர்யா இணைந்து நடித்த இந்த படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் நானூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

kamal hassan - updatenews360

அதையடுத்து தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமல் நடிப்பில் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டி இருக்கிறார். அதன் பிறகு கமல் எச்.வினோத் இயக்கத்தில் ‘KH 233’ மற்றும் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் ‘KH 234’ இல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு, இடையில் நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே நடிக்கும் பான் இந்தியன் படமான ‘ப்ராஜெக்ட் கே’ இல் கமல் முக்கிய வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

kamal hassan project k

இப்படம் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் மேலும் திஷா பாட்னி மற்றும் அமிதாப் பச்சன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் கமல் ஹாசன் தற்போது காமிக்-கான் நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க வீதிகளில் செம ஸ்டைலிஷ் வாக்கிங் சென்ற புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதை பார்த்த கமலின் ரசிகர்கள் 68 வயசாகியும் வாலிபம் குறையாமல் இப்படி மாஸா இருக்கீங்களே என புகழ்ந்து பாராட்டித்தள்ளியுள்ளனர்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…