பகவத் கீதையை இழிவுபடுத்திய ஹாலிவுட் இயக்குனர் – சர்ச்சைக்குள்ளாகும் ‘ஓப்பன்ஹெய்மர்’ பட காட்சி!

Author: Shree
21 July 2023, 5:05 pm

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் இயக்கத்தில் ‘ஓப்பன்ஹெய்மர்’ எனும் படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அணுகுண்டின் தந்தை டாக்டர் ஓபன்ஹெய்மரின் பயோபிக் படமாக உருவாகி உள்ளது.

தைரியமான கற்பனை மூலம் உருவாக்கப்பட்ட மிகவும் நேர்த்தியான படைப்பு பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் தயாராகியுள்ள இப்படத்தில் துளியும் கிராபிக்ஸ் கலக்காமல் தத்ரூபமாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.

உலகம் முழுக்க உள்ள ரசிகர்களால் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள இப்படம் பெரும் சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. ஆம், இப்படத்தின் ஒரு காட்சியில் ஜின் டாட்லாக் என்பவருடன் ஓப்பன்ஹெய்மர் உடலுறவு கொள்வார்.

அதன் பின் ஜின், அவரது அலமாரியில் பகவத் கீதை இருப்பதைப் பார்த்து அதைப் பற்றி கேட்பார்.அப்போது அவருக்காக கீதையில் இருந்து கிருஷ்ணனின் வரிகளை மேற்கோள்காட்டி “உலகங்களை அழிக்கும் எமனாக மாறிவிட்டேன்” என தெரிவிப்பதாக காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. உடலுறவு காட்சியில் பகவத் கீதையை காட்டுவதா?என சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்துள்ளனர்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…