வாழ்நாள் முழுவதும் ஜெயில்ல போடுங்க… சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2023, 8:17 pm

திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் முருகேசன் என்பவரை காவல் துறையினர் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் விசாரணை திருப்பூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்து குற்றம் சாட்டப்பட்ட முருகேசனுக்கு வாழ்நாள் சிறை தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடாக 5 லட்சம் வழங்கவும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

  • retro movie second day collection is low எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?