“ஆணாக இருந்தும் மாதவிடாய்”.. இடுப்புக்கு மேலே ஆண்.. கீழே பெண்.. பிரபல நடிகரின் நரக வலி..!

Author: Vignesh
12 August 2023, 6:45 pm

தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர், பின்னணி குரல் கலைஞர், என பன்முக திறமை கொண்டவர் எஸ் ஆர் சக்கரவர்த்தி. இவர் தற்போது சமூகத்தாலும் சக கலைஞர்களாலும், ஒதுக்கி வைக்கப்பட்டு வீட்டில் முடங்கி இருக்கிறார். தான் இடை பாலினத்தை (Intersex Person) சேர்ந்தவர் என்று அவர் அறிவித்ததை அதற்கு காரணம் என அவர் தற்போது தெரிவித்துள்ளார்.

வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக இருப்பதாகவும், வாழ்க்கையில் அனைத்து பக்கங்களிலும் நிராகரிப்பும் வலிகள் மட்டுமே பார்த்து வருவதாகவும், எஸ் ஆர் சக்கரவர்த்தி வருத்தத்துடன் பேசியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தொடர்ந்து பேசுகையில், தன்னுடைய சொந்த ஊர் பண்ருட்டி என்றும், தான் ஒரு சாதாரண குழந்தையாக தான் பிறந்து வளர்ந்ததாகவும், ஆனால் தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது திடீரென ஒரு நாள் தன்னுடைய பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வந்ததாகவும், தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

sr chakravarthy-updatenews360

அம்மாவிடம் கூறியதாகவும், அவர் முதலில் தனக்கு ஏதோ அடிப்பட்டு இருக்கும் என்று நினைத்து மருத்துவரை சென்று பரிசோதித்த பிறகு தான் தனக்கு ஏற்பட்டிருப்பது மாதவிடாய் என்று தெரிய வந்ததாகவும், ஆனால் அன்றைய காலத்தில் இடைப்பாலினம் குறித்த விழிப்புணர்வு இல்லை. இதை பரிசோதிப்பதற்கான மருத்துவ வசதிகளும் கிடையாது.

தான்னுடைய, வயிற்றில் கை வைத்து பரிசோதித்த மருத்துவர் எனக்கு கர்ப்பப்பை இருக்கிறது என்று என் அம்மாவிடம் கூறினார். ஆனால் எனக்கு அது பற்றி எதுவும் அந்த வயதில் தெரியவில்லை. அந்த வயதில் என்னுடைய உடலுக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டதை மட்டும் என் நண்பன் ஒருவனிடம் கூறினேன். அவன் அவனுடைய அம்மாவிடம் தெரிவிக்க அவர் என் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்து விட்டார். அப்படியே ஊர் முழுக்க நான் பேசுபொருளாகி விட்டேன். அன்று முதல் நான் எதிர்கொண்ட ஒடுக்கு முறைகளும் நிராகரிப்புகளும் இன்னுமும் தொடர்ந்து வருகின்றன.

sr chakravarthy-updatenews360

காரணமே இல்லாமல் பள்ளியில் என் ஆசிரியர்கள் என்னை அடிப்பார்கள். வெறுப்புடன் நடந்து கொள்வார்கள். அந்த சிறுவயதில் நான் அப்படி என்ன தவறு செய்து விட்டேன் என்று யோசிப்பேன் என்று வேதனையுடன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.

இடைப்பாலினம் குறித்து யாருக்கும் விழிப்புணர்வு இல்லாததால் என்னை அனைவரும் ஒரு திருநங்கையாக தான் நினைத்தார்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் அனைத்து ஒடுக்கு முறைகளையும், நானும் அனுபவித்தேன். ஆறாம் வகுப்பு படிக்கும் போது என் வகுப்பு ஆசிரியர் ஒருவர் என்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார். சாலைகளில் நடந்து போகும்போது என்மேல் தண்ணீர் எடுத்து ஊற்றுவார்கள் என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.

sr chakravarthy-updatenews360

உடல் ரீதியாகவும், பல துயரங்களை அனுபவித்ததாகவும் சக்கரவர்த்தி அந்த பேட்டியில் தெரிவித்தார். மேலும், ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படும் போது என்ன வலிகள் ஏற்படுமே, அத்தனை வழிகளையும் தான் அனுபவித்ததாகவும், பொதுவாக மாதவிடாய் காலங்களில் பெண்கள் நாப்கினை பயன்படுத்துவது போல் என்னால் அவ்வளவு எளிதாக அதை பயன்படுத்த முடியாது. ஏனென்றால், பெண்களின் பிறப்புறுப்பு அமைப்பிற்கும் ஆண்களின் பிறப்புறுப்பு அமைப்பிற்கும் உள்ள வேற்றுமை அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், எவ்வளவு சிக்கலான முறையில் நான் நாப்கினை பயன்படுத்தி இருப்பேன் என்பதை நினைத்து பாருங்கள் என்று கனத்த குரலில் தெரிவித்தார்.

அதற்காகவே மிகவும் இறுக்கமான உள்ளாடைகளை நான் அணிய வேண்டிய கட்டாயத்திலிருந்ததால் அதன் காரணமாக மாதவிடாய் காலத்திற்குப் பிறகு எனக்கு நிறைய தொற்றுகள் ஏற்பட்டிருக்கின்றன. அதற்கும் தனியாக மருந்துகள் எடுத்துக் கொள்வேன். தூங்கும்போது கூட என்னால் நிம்மதியாக தூங்க முடியாது வயிற்று வலி, கால் வலி, இடுப்பு வலி, முதுகு வலி என அனைத்து இன்னல்களையும் தான் அப்போது அனுபவித்தேன்.

sr chakravarthy-updatenews360

மாதவிடாய் தள்ளிப் போகும் நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் மாதவிடாய் ஏற்பட்டு விடுமோ என்ற பதட்டத்துடனே தான் இருந்ததாகவும், அந்த சமயங்களில் ஒரு நண்பன் நான் சோர்வடையும் போது, நிறைய கதைகளை கூறி என்னை உற்சாகப்படுத்துவான். அவனுக்கு சினிமாவிற்குள் செல்ல வேண்டும் என்று ஆசை இருந்தது.

அவன் கூறும் கதைகளில் என்னை கதாநாயகனாக உருவகப்படுத்துவான். அப்படித்தான் எனக்கு ஊடகங்களின் மீதும் நடிப்பு மீதும் ஆர்வம் பெற தொடங்கியது என்று சக்கரவர்த்தி தெரிவித்திருந்தார். சென்னைக்கு வந்த பிறகு தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரின் உதவியாளர் தனக்கு முதன் முதலில் பின்னணி குரல் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

sr chakravarthy-updatenews360

அதன் பின்னர் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், வாய்ப்பு கிடைத்தது அங்கே தான் சண்முகநாதன் என்பவர் அறிமுகம் ஏற்பட்டது. என் வாழ்க்கையில் ஒரு குரு போன்றவர் அவர், இப்போது வரை அவர் எனக்கு ஆதரவளித்து வருகிறார். தூர்தர்ஷனில் மருத்துவ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகளை அவர் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். அதே சமயம் சில தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்தேன் என்று அவர் தெரிவித்தார்.

இப்போது நான் ஒரு இடை பாலினத்தை சேர்ந்தவன் என்று அறிவித்ததும் மற்றவர்கள் என்னிடம் அணுகும் விதத்தில் வித்தியாசம் ஏற்பட்டது. பலபேர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்கள். நான் அவரிடமிருந்து விலகி சென்றேன். ஆனால், என்னை வேண்டுமென்றே சூட்டிங் என்பது அவமானப்படுத்துவார்கள். சக கலைஞர்கள் கூட எனக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஆண்கள் மட்டுமல்ல பெண்களிடமிருந்தும் கூட எனக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்பட்டு இருக்கின்றன. என் அப்பாவின் பென்சன் ஊதியத்தில் தான் என்னுடைய மருத்துவ செலவுகளை செய்து வருகிறேன். எங்களைப் போன்றவர்களின் கதைகளை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டும் இந்த சமூகம் உண்மையில் எங்களைப் பற்றி புரிந்து கொள்வதில் அக்கறை செலுத்துவதில்லை. எங்களுக்கு ஆதரவளிப்பதும் இல்லை. ஆனால், நாம் எங்கே நிராகரிக்கப்படுகிறோமோ அங்கே தான் நமக்கான அங்கீகாரம் பெற வேண்டும் என அதற்கான முயற்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார்.

sr chakravarthy-updatenews360

தமிழக அரசால் வழங்கப்படும் அடையாள அட்டை (TG CARD) இனி இடைபாலினத்தவரும் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அடையாள அட்டையை பெற்றிருக்கும் முதல் நபராக எஸ் ஆர் சக்கரவர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • bayilvan ranganathan vs watermelon star diwakar viral on internet பயில்வான் VS திவாகர்- இன்ஸ்டாகிராம் நடிகர்னா இளக்காரமா? ரணகளமான பிரஸ்மீட்