பொய் பேசுபவன் இல்லை இந்த பழனிசாமி.. திமுக தினமும் ரூ.10 கோடி ஊழல் செய்கிறது : மாநாட்டில் இபிஎஸ் கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2023, 7:42 pm

அதிமுக மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளாராக எடப்பாடி பழனிசாமி நடத்தும் முதல் பிரமாண்ட கூட்டம் இது என்பதால் தமிழக அரசியலிலும் இந்த மாநில மாநாடு முக்கியத்துவம் பெற்றது. மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் இந்த மாநாடு நடைபெற்றது. சுமார் 63 ஏக்கரில் பிரம்மாண்ட மாநாட்டு பந்தல் அமைத்து இந்த மாநாடு நடைபெற்றது.

லட்சகணக்கான தொண்டர்கள் குவிந்து இருந்த நிலையில், காலை முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ரோபோ சங்கர், மதுரை முத்து, ராஜலட்சுமி – செந்தில் உள்ளிடோர் பங்கேற்றனர். அதிமுக மாநாட்டில் 32 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து 6 மணியளவில் எடப்பாடி பழனிசாமி பேச துவங்கினார்.

அப்போது, அம்மா மினி கிளினிக், ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள், குடிமராமத்து திட்டம், ஏரிகளை தூர்வாரியது, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தியது என அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி பேச தொடங்கினார்.

தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பிறகு திமுகவை விமர்சிக்க தொடங்கினார். எடப்பாடி பழனிசாமி பேசுகையில், பொய் பேசுவபன் இந்த பழனிசாமி இல்லை.. சாதித்து காட்டுபவன் என்றார்.

எடப்பாடி பழனிசாமி பேசுகையில், திமுகவுக்கு அனைத்தும் பொய்தான்.. திமுக முழுக்க முழுக்க பொய் பேசி தான் ஆட்சிக்கு வந்தனர். திமுகவுக்கு பொய் தான் மூலதனம்.. ஆனால் பொய் பேசுபவன் இல்லை இந்த பழனிசாமி.. சாதித்து காட்டுபவன்.. இவர்களே நீட் தேவை கொண்டுவந்துவிட்டு.. இப்போது இவர்களே விலக்கு கோரி உண்ணாவிரதம் இருக்காங்க.

திமுக தினமும் டாஸ்மாக் மூலம் ரூ.10 கோடி ஊழல் செய்கிறது.
டாஸ்மாக்கில் நாளொன்றுக்கு ரூ.10 கோடி ஊழல் செய்து வருவது திமுக அரசு தான் ஒரு பாட்டிலுக்கு ரூ.100 வரை திமுக அரசு ஊழல் செய்து வருகிறது என விமர்சித்தார்.

  • producer asked 40 lakhs to prajin for shooting 40 லட்சம் கொடுத்தால் தான் ஷூட்டிங்?- கறார் காட்டிய வடிவேலு பட தயாரிப்பாளர்! அடக்கொடுமையே…